ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் தென்காசியில் நடைபெற இருக்கிறது. 1930-40 காலக்கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக்களத்தில் உருவாகிறது. இதற்காக நீண்ட தலைமுடி, தாடி என உலா வருகிறார் தனுஷ். இது தொடர்பான போட்டோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இருதினங்களுக்கு முன் மாநகரம் பட புகழ் சந்தீப் கிஷான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது நாயகியாக பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார். தமிழில் டாக்டர் படத்தில் அறிமுகமாகி எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்தார் பிரியங்கா. அடுத்து தனுஷ் உடன் நடிக்கிறார்.
இதுபற்றி பிரியங்கா கூறுகையில், ‛‛இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் தனுஷ் உடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. படப்பிடிப்பு துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்கிறார்.