வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரபல வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சி, இன்று (செப்.,25) சென்னையில் நடக்கிறது. இதற்காக 'எனது இதய வீணை' என்ற தலைப்பில், மாலை 6:30 மணியளவில், சென்னை, தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்ச்சியில், எஸ்.பி.பி.,யின் பழைய, புதிய என்று பிரபலமான பல பாடல்கள் பாடப்பட இருக்கிறது. ராஜேஷ் வைத்யாவுடன் பிரபலமான பல இசைக்கலைஞர்கள் கைகோர்த்து, நிகழ்வை சிறப்பிக்க உள்ளனர்.
ராஜேஷ் வைத்யா எனும் வீணைச்சக்ரவர்த்தி தன் மாயவிரல்களால், ஆசை வீணையின் தந்திகளை மீட்டி, அமரரான எஸ்.பி.பி.,யை மகிழ்ச்சிப்படுத்த இருக்கிறார். அந்த மகிழ்ச்சி அலையில் நீங்களும் நனையலாம். இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதி கட்டணம் உண்டு. மேலும் விபரங்களுக்கு 9884152200 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழும் இணைந்து வழங்குகிறது.