5 வருடப் பயணம்: அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி | 257 நாட்கள் நடந்த 'விடுதலை 1, 2' படப்பிடிப்பு | தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் சிவின்! | பிளாஷ்பேக்: பழம்பெரும் பாலிவுட் நடிகர் வி சாந்தாராம் தயாரித்த பைந்தமிழ் திரைக்காவியம் “சீதா கல்யாணம்” | எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி ; அதிதிக்கு சித்தார்த் புகழாரம் | நயன்தாராவுக்கு ரூ.25 கோடி; நாக சைதன்யாவுக்கு ரூ.50 கோடி- நெட்பிளிக்ஸ் திருமண பேரம் | 8ம் ஆண்டு திருமண கொண்டாட்டத்தில் திலீப் - காவ்யா மாதவன் | இளைய மகன் திருமணத்தை அறிவித்த நாகார்ஜுனா | முதல்முறையாக ரீ ரிலீஸ் ஆகும் குணா! | தேவி ஸ்ரீ பிரசாத்தை தொடர்ந்து படங்களில் இருந்து நீக்கும் தயாரிப்பு நிறுவனம்! |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30ம் தேதி திரைக்கு வருவதை அடுத்து தொடர்ந்து படக்குழு புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மும்பையில் இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது மீடியாக்கள் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளில் இருக்கும் போது வரலாற்று கதையை படமாக்க வேண்டியது அவசியம் என்ன? என்று ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அதற்கு விக்ரம் பதிலளிக்கையில், இன்று நாம் பல பிரமீடுகளை பார்க்கிறோம். இதை கட்டுவதற்கு எப்படி எல்லாம் யோசித்து இருப்பார்கள் என்று ஆச்சரியப்படுகிறோம். ஆனால் உலகிலேயே மிக உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சையில்தான் உள்ளது. ஆனால் நாமெல்லாம் எகிப்தில் உள்ள பிரமிடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டியிருப்பார்கள் என்று வியப்புடன் பேசிக்கொள்கிறோம். அவற்றை எல்லாம் விட ஆச்சரியப்படக் கூடிய ஒரு கோபுரம்தான் தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரம். இது சோழர் காலத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
உலகிலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் இதுதான். அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டும் 80 டன் எடை கொண்டது. இந்த கல்லை மேலே தூக்கிச் செல்வதற்கு அன்றைய காலகட்டத்தில் இயந்திரங்கள் கிடையாது. யானைகள், காளைகள் மற்றும் மனிதர்கள் மட்டுமே அதை தூக்கி நிறுத்தி கட்டி உள்ளார்கள். அந்த கோவில் ஆறு பூகம்பங்களை தாங்கியுள்ளது. அந்த அளவுக்கு ஆறடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன் பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டியுள்ளார்கள். ஆனால் உலகிலேயே ஒரு மிகப்பெரிய அதிசயம் நம்முடைய இந்தியாவில் இருக்கும்போது நாமெல்லாம் பிரமிடுகள் பற்றியும் பைசா கோபுரம் பற்றியும் பேசுகிறோம்.
ஒழுங்காக நிற்காத பைசா கோபுரத்தை பார்த்து நாம் பாராட்டுகிறோம். அதன் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இன்றளவும் உறுதியாக நிற்கும் பழங்கால கோபுரம் நம் நாட்டில் உள்ளது. அதனுடைய பெருமைகள் நம்முடைய இந்தியர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. அதைத்தான் இந்த பொன்னியின் செல்வன் படம் சொல்லப்போகிறது. அதோடு ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் ஐந்தாயிரம் அணைகள் கட்டியுள்ளார். அந்த காலத்திலேயே நீர் மேலாண்மை ஆணையத்தையும் அவர் அமைத்திருந்தார். அதோடு அப்போது அனைத்து ஊர்களுக்கும் ஆண்களின் பெயர்களை மட்டுமே சூட்டி வந்து நிலையில் அவர்தான் பெண்கள் பெயரை சூட்டி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
அதோடு இலவச மருத்துவமனைகள் எல்லாம் கட்டியுள்ளார். இவை எல்லாமே ஒன்பதாம் நூற்றாண்டில் நடந்தவை. அதற்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடித்தார். இதன் மூலம் நாம் எந்த அளவுக்கு பெருமைகளை கலாச்சாரத்தை கொண்டுள்ளோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அதை நினைத்து நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும் என்று அந்த பிரஸ்மீட்டில் சோழர்கால பெருமைகளை சொல்லி அனைத்து வட இந்தியர்களையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் நடிகர் விக்ரம்.