விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

கடந்த 2023ம் ஆண்டில் ஹிந்தியில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான படம் 'கில்'. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ரமேஷ் வர்மா என்கிற தெலுங்கு இயக்குனர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் கில் படத்தை ரீமேக் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழில் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் உறியடி விஜயகுமார் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானதை தொடர்ந்து இப்போது இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கேதிகா சர்மா என மூன்று கதாநாயகிகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கில் படத்தில் ஒரு கதாநாயகி தான் ஆனால், இதன் ரீமேக்கில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதால் கதையில் மாற்றம் செய்திருப்பார்கள் என தெரிகிறது.