'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு படம் ‛பொன்னியின் செல்வன்'. அமரர் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக படமாக இயக்கி, லைகா உடன் இணைந்து தயாரித்துள்ளார் மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், கிஷோர், ரகுமான் என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முதல்பாகம் செப்.30ல் வெளியாக உள்ளது. இதற்காக பல்வேறு ஊர்களில் படக்குழுவினர் புரொமோஷன் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்று வந்துள்ளது. படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்று அளித்துள்ளனர். அதோடு படம் 2 மணிநேரம் 47 நிமிடம் ஓடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.