'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு பலரும் உதவ முன் வந்துள்ளனர்.
தமிழ் திரைப்பட நடிகர் 'போண்டா' மணி, 59. இவர், காமெடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள போண்டா மணி, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டயாலிசிஸ் சிகிச்சை துவங்க உள்ளது.
போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது, உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு யாராவது உதவ முன்வாருங்கள் என நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார். இது வீடியோ வைரலானது. தமிழக அரசு சார்பில் போண்டாமணிக்கு வேண்டிய மருத்துவ சிகிச்சை அரசு சார்பில் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். அவரது உடல்நலம் பற்றி நேரிலும் நலம் விசாரித்தார்.
இந்நிலையில் போண்டா மணிக்கு பலரும் உதவ முன் வந்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் உதவி உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் மனோபாலா, போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு நிதியுதவியையும் வழங்கினார். சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு சிறு பண உதவி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர திரைத்துறை சாராத மற்றவர்களும் உதவ தொடங்கி உள்ளனர்.