சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… |

பாலா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, கிரித்தி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் 'வணங்கான்'. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் ஆரம்பமாகி நடைபெற்றது. அதற்குப் பின் படம் பற்றி பல சர்ச்சைகள் வந்தது. அனைத்திற்கும் அதிகாரப்பூர்வமாகவே முற்றுப் புள்ளி வைத்தார்கள்.
இதனிடையே, சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42வது படத்தின் பூஜையும் நடைபெற்று அதன் மோஷன் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாக உள்ள 'வாடிவாசல்' படம் எப்போது ஆரம்பமாகும் என்பதும் தெரியவில்லை.
'வணங்கான்' படத்தைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் சூர்யா, சிவா இயக்கும் படத்தில் நடிக்கப் போய்விட்டார் என்றும் பேச்சு உள்ளது. அதே சமயம், இயக்குனர் பாலா 'வணங்கான்' படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை உருவாக்காத காரணத்தால்தான் படத்தைத் தள்ளி வைத்தார்கள் என்றும் மற்றொரு பேச்சு உள்ளது. இந்நிலையில் 'வணங்கான்' படத்திற்கான பாடல் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது என படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் 'அப்டேட்' கொடுத்துள்ளார்.
'வணங்கான், வாடிவாசல், சூர்யா 42' எது முதலில் வரும் ?.




