'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா - விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, தனது முதல் கணவன் அஸ்வினுடன் விவாகரத்து பெற்றபின், தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்து கொண்டார். அஸ்வின் - சவுந்தர்யாவின் மகனான வேத், சவுந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறார். இந்நிலையில், விசாகன் - சவுந்தர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: அபரிமிதமான கடவுள் அருளுடனும், எங்கள் பெற்றோர் ஆசிர்வாதத்துடனும், விசாகன், வேத் மற்றும் நான் வேதின் தம்பியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். செப்.,11ம் தேதி, வீர் ரஜினிகாந்த வணங்காமுடி பிறந்தார். டாக்டர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது 4வதாக பேரன் பிறந்துள்ளதை குறிப்பிட்டும், ரஜினிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.