‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

தெலுங்குத் திரையுலகத்தின் 'ரெபல் ஸ்டார்' என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணம் ராஜூ உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை ஐதராபாத்தில் காலமானார்.
'பாகுபலி, ராதேஷ்யாம்' நடிகரான பிரபாஸின் பெரியப்பா தான் கிருஷ்ணம் ராஜு. பிரபாஸின் திரையுலக வளர்ச்சியில் கிருஷ்ணம் ராஜுவின் பங்கு முக்கியமானது. பிரபாஸ் குடும்பத்தின் தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் கிருஷ்ணம் ராஜுவும் ஒருவர்.
42 வயதான பிரபாஸுக்குத் திருமணத்தை நடத்திப் பார்க்க வேண்டும் என்று அதிகம் ஆசைப்பட்டவர். அந்த ஆசை நிறைவேறாமல் மரணத்தைத் தழுவியுள்ளார். மேலும், கிருஷ்ணம் ராஜுவின் திரையுலக வாழ்க்கையில் பெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் 'பக்த கண்ணப்பா'. அந்தப் படத்தை இந்தக் காலத்திற்கேற்ப மீண்டும் உருவாக்க ஆசைப்பட்டிருந்தார் கிருஷ்ணம் ராஜு. அவர் நடித்த கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கவும் சம்மதித்திருந்தார். படத்தைத் தயாரித்து இயக்க வேண்டும் என்று ஆசையில் கிருஷ்ணம் ராஜு இருந்தார். அந்த ஆசையும் நிறைவேறாமலேயே போய்விட்டது.