ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
நடிகர் சிம்பு நடித்துள்ள ‛வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது. இதற்கான டிரைலர், இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, ‛தயவு செய்து பசங்களை திருமணம் செய்ய சொல்லி பெற்றோர்கள் டார்ச்சர் பண்ணாதீங்க. அவசரப்பட்டு திருமணம் செய்த பலருடைய வாழ்க்கை பிரச்னைகளில் சிக்கியதை நாம் பார்க்கிறோம்' என அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், தன்னுடைய திருமணம் குறித்து சிம்பு தற்போது கூறுகையில், ‛சமீபகாலமாக எனது திருமணம் பற்றி நிறைய கேள்விகள் வ்ருகின்றன. நான் அவரை காதலிக்கிறேன், இவரை திருமணம் செஞ்சுகிட்டேன் என்றெல்லாம் கூட பரப்புகிறார்கள். நான் 19 வயசுல இருந்தே இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன். மகனை திருமண கோலத்தில் பார்க்கனும்னு எல்லா பெற்றோருக்கும் ஆசை இருக்கும். அதேபோல் தான் எனது தாய், தந்தையும் விரும்புகிறார்கள். ஆனால் எனக்குத்தான் திருமணம் செய்துகொள்ள சற்று பயமாக உள்ளது.
அவசர அவசரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் கருத்து வேறுபாடு, சண்டை, விவாகரத்து என்று பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்கிற பயத்தால்தான் நான் திருமணத்தை தள்ளிப்போடுகிறேன். எனக்கான சரியான துணை வரும் வரை காத்திருக்கலாம் என்று நான் முடிவு பண்ணிருக்கேன்' என்றார்.