ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் பங்கேற்று டிரைலரை் வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த். பின்னர் பேசிய அவர், ‛‛நம்ம விக்ரம் என்று கூறி விக்ரம் படத்தின் வெற்றிக்காக அருகில் இருந்த கமலை கட்டி அணைத்து பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய ரஜினி, ‛‛மணிரத்னம் அசுர திறமைசாலியான மனிதர். ஆரம்பத்தில் சின்ன சின்ன நடிகர்களை வைத்து படம் பண்ணி தனது சினிமா கேரியரை துவங்கியவர் இன்று பெரிய இடத்திற்கு வந்துள்ளார். மும்பையில் இருக்கும் பெரிய ஸ்டார்ஸ் எல்லாம் மணிரத்னத்தை பார்த்தால் எழுந்து நிற்பார்கள். அந்தகாலத்தில் பார்ட் 1,2 என்றெல்லாம் படம் எடுக்க முடியாது. அதனால் தான் பொன்னியின் செல்வன் அப்போது படமாக எடுக்க முடியவில்லை. இப்போது எடுத்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தில் வரும் நந்தினி கேரக்டர் தான் நான் நடித்த படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டருக்கான இன்ஸ்பரேசன்.
அந்தக்காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் கேரக்டர் யார் பண்ணினால் நன்றாக இருக்கும் என ஒரு பேட்டியில் கேட்டார்கள். அதற்கு அவர் ரஜினிகாந்த் என்று கூறினார். அவர் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நான் நடிக்கவா என்று மணிரத்னத்திடம் கேட்டேன். அவர் ஒத்துக்கவில்லை. வந்தியதேவனாக நான், பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, பெரிய பழுவேட்டையர் சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது நான் பிளான் பண்ணும் போது எனக்கு தோன்றியது'' என்றார்.'' என்றார்.