8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் |
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடித்து 2006ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛வேட்டையாடு விளையாடு'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கவுதம் மேனன் பல பேட்டிகளில் கூறி உள்ளார். சமீபத்தில் கூட படத்தின் 60 சதவீத கதை பணி முடிந்துவிட்டதாக கூறி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது பேசிய கமல், ‛வேட்டையாடு விளையாடு 2' படத்தின் திரைக்கதையை என்னிடம் தருவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவுதம் மேனன் கூறினார். ஆனால் இன்னும் வரவில்லை என கவுதமிடம் கேட்டார்.
அதற்கு, ‛‛எழுத்தாளர் ஜெயமோகன் தான் ‛வேட்டையாடு விளையாடு 2' படத்தின் திரைக்கதையை எழுதி வருகிறார், சீக்கிரம் வரும் சார் என்றார் கவுதம் மேனன். இதை வைத்து பார்க்கையில் விரைவில் வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.