தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! | வெப் தொடர் இயக்கும் ஸ்ரீ கணேஷ்! | சித்தா படத்தின் டிரைலரை வெளியிடும் சூர்யா! |
நடிகர் புகழ் சமீபத்தில் பென்சியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ரசிகர்கள், திரையுலகினர் பலரும் மணமக்களை வாழ்த்தினர். அதேசமயம் கடந்த ஓராண்டுக்கு முன்பே அவர் சுயமரியாதை திருமணம் செய்த போட்டோக்கள் வெளியாகி, அவர் மீது விமர்சனமும் முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ‛‛என் தந்தை அன்பிற்கு ஒரு முறை… தாய் அன்பிற்கு ஒரு முறை… மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை…வேறு அன்பு உள்ளங்கள் ஆசைப்பட்டால் மேலும் ஒரு முறை தயார். இந்தியனாக இருக்கிறேன். எல்லா புகழும் இறைவனுகே'' என பதிவிட்டார் புகழ்.
இந்நிலையில் மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடன் தான் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா. உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க இரண்டு பேருக்கும் இருக்கும்னு நம்புறேன். கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுளை வேண்டிக்கிறேன்'' என உருக்கமாக பதிவிட்டுள்ளார் புகழ்.
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல காமெடி நிகழ்ச்சிகளில் பாலாஜி உடன் பயணித்தவர் புகழ். அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக இப்படி பகிர்ந்துள்ளார் புகழ்.