கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 |

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இதில் அவர் நிர்வாணமாக நடித்துள்ளார் என்று கூறப்பட்டது. பின்னர் அந்த காட்சியை மிஷ்கின் நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து மிஷ்கின் கூறியிருப்பதாவது: நிர்வாண காட்சிகளில் நடிப்பதற்காக ஆண்ட்ரியா அதிக சம்பளம் கேட்டது உண்மை தான். இது வழக்கமான ஒன்று. ஆனால் நிர்வாண காட்சிகளை படமாக்கவில்லை. புகைப்படங்களே எடுக்கப்பட்டது. எனக்கும், ஆண்ட்ரியாவுக்கு பொதுவான நண்பரான புகைப்பட கலைஞர் சுந்தர் அந்த படங்களை எடுத்தார். அப்போது எனது பெண் உதவியாளர் மட்டுமே அங்கே இருந்தார். நான்கூட அந்த படங்களை பார்க்கவில்லை. பிசாசு 2 படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் நிர்வாண படங்களை நீக்கச் சொல்லிவிட்டேன். காரணம் அந்த காட்சிகள் இடம்பெற்றால் தணிக்கையில் ஏ சான்றிதழ் தான் தருவார்கள். அப்போது குழந்தைகள் பார்க்க முடியாது. அதனால் நீக்கி விட்டேன் என்கிறார் மிஷ்கின்.