மகேஷ்பாபுவின் 'அத்தடு' 1500 முறை டிவியில் ஒளிபரப்பு: இப்படியும் ஒரு சாதனையா? | பிளாஷ்பேக்: மகாத்மா காந்தி பார்த்த ஒரே சினிமா | பிளாஷ்பேக்: கவிஞருக்காக காட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் | 'ஸ்வீட்ஹார்ட்' படத்தால் 4 கோடி நஷ்டம்; வருத்தத்தில் யுவன் ஷங்கர் ராஜா | டெஸ்ட் - நேரடி ஓடிடி வெளியீட்டிலேயே பெரிய லாபம் | மோகன்லால் - விக்ரம் நேரடி மோதல் | 'இட்லி கடை' - இன்னும் தயாராகவில்லையா? | 'சிம்பு 49' படத்தில் சந்தானம்? ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் | 'கேம் சேஞ்ஜர்' கருத்து சொன்ன தமனை 'அன்பாலோ' செய்த ராம் சரண் | 'எல் 2 எம்புரான்' டிரைலர்களில் 'லைக்கா' பெயர் |
ஷியாம் சிங்காராய், அன்டே சுந்தரானிக்கி படத்தைத் தொடர்ந்து நானி நடித்து வரும் படம் தசரா. ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களைத் தவிர, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார். இது பான் இந்தியா படமாக உருவாகிறது.
தயாரிப்பு நிலையில் இருக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளளது. அத்துடன் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் நடிகை சில்க் ஸ்மிதா புகைப்படத்திற்கு முன்பு கையில் பாட்டிலுடன் நானி அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளிவரும் என எதிர்பார்த்த படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது நானி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.