ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! | கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி! | வாழை படத்தின் இரண்டாம் பாகம்! - மாரி செல்வராஜ் தகவல் | பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், ரஜினி! | நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதல்ல - மாளவிகா மோகனன் | ஹிந்தி படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் | தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை? |
நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இதில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் சங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறி கே.பாக்யராஜ் மீது நடிகர் சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறது. இது தொடர்பாக கே.பாக்ய ராஜுக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் தேர்தல் பற்றியும், நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறீர்கள், அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறீர்கள். இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி உள்ளீர்கள்.
இது சங்க விதிகளுக்கு முரணானது. தங்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க உறுப்பினர்களும் வற்புறுத்தி வருகிறார்கள். இது குறித்து செயற்குழுவில் ஆலோசித்து தங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தங்களை சங்கத்தில் இருந்து ஏன் நீக்க கூடாது. என்பதற்கு தங்கள் பதிலை 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாவிட்டாலோ, அல்லது தங்கள் பதில் திருப்தி அளிக்காவிட்டாலோ தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.