கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் | வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு | அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன் | புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஷெரின் ஜானு | சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு | தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் |
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டு கோளை ஏற்று பலரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்களது புகைப்படங்களுக்குப் பதிலாக தேசியக் கொடியை 'டி.பி.' ஆக வைத்துள்ளார்கள்.
இந்தியத் திரையுலகின் மூத்த இசையமைப்பாளரும், ராஜ்ய சபா நியமன உறுப்பினருமான இளையராஜா திருவண்ணாமலையில் இன்று தேசியக் கொடியை ஏற்றினார். நடிகர் ரஜினிகாந்த் சுதந்திர தினக் கொண்டாட்டம் குறித்து ஏற்கெனவே வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் சிலரும் அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் பலரும் இன்று தங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கம் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.