மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
நடிகர் தனுஷ் 'தி கிரே மேன்' படத்தின் மூலம் சர்வதேச நடிகராக மாறியுள்ளார். அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கிய 'தி கிரே மேன்' படத்தில் தனுஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் அடுத்த பாகங்களிலும் தனுஷ் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், ருஸ்ஸோ சகோதரர்கள் 'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷின் நடிப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷ் மதுரையைச் சேர்ந்த கேங்ஸ்டராக சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
"தனுஷ் நடனத்தில் மாஸ்டர். அதைப் படத்தில் நாம் பார்க்க முடியும். 'தி கிரே மேன்' படத்திலும் பார்க்கலாம். தனுஷ் உடன் ஹாலிவுட் படத்தில் பணிபுரிந்த செய்த பிறகு தனுஷின் இந்த படத்தை பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த படத்தில் கேமரா முன் அவர் பயங்கரமாக நடிக்கிறார். அவருக்கு அற்புதமான மீசை உள்ளது." என்று தெரிவித்துள்ளனர்.