விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? |

சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்த நயன்தாரா தற்போது அவருடன் அவ்வப்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார் நயன்தாரா.
அதேபோல தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவியுடன் அவர் இணைந்து நடித்து வரும் இறைவன் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வந்த நயன்தாரா, அந்த படத்தில் தனது காட்சிகளை சமீபத்தில் முடித்து கொடுத்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர்-3௦ல் வெளியாக இருக்கிறது. இது தவிர அகிலன் என்கிற படத்தை முடித்துவிட்ட ஜெயம் ரவி, இறைவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.