சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து சிம்புவை மூன்றாவது முறையாக 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் இயக்குகிறார் கவுதம் மேனன் . குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சிம்புவின் அம்மாவாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யூனிவர்சிடியில் நடைபெற இருக்கிறது . மேலும் இந்த விழாவில் ரஜினியும் , கமலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது .




