படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
தமிழ்த் திரையுலகின் சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்கள். அவர்களுக்குப் பின் சினிமாவில் அறிமுகமான நடிகர்களில் ஒரு சிலர் மட்டும்தான் சமூக வலைத்தளங்களில் உள்ளார்கள்.
முன்னணி நடிகர்களில் விஜய் பெயரில் ஒரு டுவிட்டர் கணக்கு இருக்கிறது. ஆனால், அதில் எப்போதாவது ஒரு முறைதான் அப்டேட் வரும். அதையும் விஜய் நேரடியாக நிர்வகிக்கவில்லை. அவரது அலுவலகத்தில்தான் நிர்வகிக்கிறார்கள். விக்ரம், அஜித் இருவரும் சமூக வலைத்தளம் பக்கம் வராமல் இருந்தார்கள். இப்போது விக்ரம் டுவிட்டர் தளம் பக்கம் வந்துள்ளார். அதற்குள் 71 ஆயிரம் பேர் அவரைப் பின் தொடர்ந்துள்ளார்கள். வரும் போதே தன்னுடைய கணக்கை 'வெரிபைடு' வாங்கித்தான் நுழைந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது பெயரில் ஏற்கெனவே ஒரு கணக்கு உள்ளது. ஆனால், அதில் 214 வாரங்களுக்கு முன்பாகத்தான் தனது கடைசி பதிவை பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் தளத்தில் விக்ரம் நுழைந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' இந்த மாதம் 31ம் தேதியும் அடுத்த மாதம் 31ம் தேதி 'பொன்னியின் செல்வன்' படமும் வெளியாக உள்ளது. தாமதமாக வந்தாலும் சரியான நேரத்தில்தான் விக்ரம் டுவிட்டர் பக்கம் வந்துள்ளார்.