Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின்

13 ஆக, 2022 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Mysskin-says-he-did-not-seen-Vijay-antony-any-movie

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் மிஷ்கின். நேற்று நடைபெற்ற 'கொலை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் 'கொலை' படத்தின் நாயகனான விஜய் ஆண்டனி நடித்த ஒரு படங்களைக் கூடப் பார்க்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். பொதுவாக சினிமாவில் உள்ளவர்கள் தமிழில் வெளியாகும் பல படங்களையும் பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள். அனைத்துப் படங்களையும் இல்லை என்றாலும் சில முக்கியமான படங்களையாவது இயக்குனர்கள் பார்த்துவிடுவார்கள்.

ஆனால், சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி பத்து ஆண்டுகளைக் கடந்தவர் விஜய் ஆண்டனி. அவருடைய நடிப்பில் வெளிவந்த 'பிச்சைக்காரன்' படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் கூட பெரிய வசூலைப் பெற்ற ஒரு படம். அந்த ஒரு படத்தைக் கூட மிஷ்கின் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம்தான்.

மிஷ்கின் அப்படிப் பேசியதைக் கண்டு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று தெரியாமல் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் மேடையில் இருந்த விஜய் ஆண்டனி. ஒரு நடிகரின் படத்தின் விழாவில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினர்களை அழைக்கும் போது இது பற்றியெல்லாம் தெரிந்து அழைக்க வேண்டாமா ?.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போதுசமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது டுவிட்டரில் நுழைந்த விக்ரம் டுவிட்டரில் நுழைந்த விக்ரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Tamil - Trichy,இந்தியா
15 ஆக, 2022 - 16:12 Report Abuse
Tamil மிஸ்கின் என்றாலே அரபியில் பிச்சைக்காரன் என்றுதான் அர்த்தம். ஆனால் அந்த படத்தைக்கூட பார்க்கவில்லை என்றால் இவன் குருட்டு பிச்சைக்காரனாகத்தான் பார்க்கவேண்டும்.
Rate this:
Vijay -  ( Posted via: Dinamalar Android App )
13 ஆக, 2022 - 16:04 Report Abuse
Vijay Because Inga irunthu copy adicha, easya kandu pudichralaamla. Athan payapula ipdi pesuran
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in