‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2002ம் ஆண்டில் விஜய் நடித்த யூத் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் மிஷ்கின். பின்னர் 2006ம் ஆண்டில் சித்திரம் பேசுதடி என்ற படத்தில் அவர் இயக்குனர் ஆனார். அதன்பிறகு அஞ்சாதே, முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெயின் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த சச்சின் படம் இன்று மீண்டும் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணுவுடன் இணைந்து நேற்று இரவு பார்த்து ரசித்துள்ளார் மிஷ்கின்.
அதன் பிறகு மீடியாக்களை சந்தித்த அவர், ‛‛இந்த படம் மீண்டும் கல்லூரி காலத்திற்கு சென்றது போல் இருந்தது. விஜய் நடித்த யூத் படத்தில்தான் எனது கேரியரை தொடங்கினேன். அதன்பிறகு சச்சின் படத்தை திரைக்கு வந்த போது பார்க்காத நான் இப்போதுதான் முதன்முதலாக பார்த்தேன். ரொம்ப ஜாலியான படம். காதலிக்கும் போது எப்படி குழந்தைத்தனமாக இருப்போமோ அதை வைத்து ஒரு படம் பண்ணியுள்ளார்கள்.
இந்த படத்தின் கிளைமேக்ஸ் ரொம்ப பிடித்துள்ளது. குறிப்பாக விஜய் ஹேண்ட்ஸ்சமாக இருக்கிறார். அவர் நடித்த படங்களில் இதில் தான் அவரை மிகவும் அழகாக காட்டி இருப்பதாக கருதுகிறேன். விஜய் போன்ற நடிகர் எல்லாம் சினிமாவை விட்டு செல்வது மிகப்பெரிய இழப்பு. இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் அவர், அரசியல் வேலைகளை பார்த்தாலும் அவ்வப்போது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என தெரிவித்திருக்கிறார் மிஷ்கின்.