என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கி உள்ள விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றபோது, கோலிவுட்டின் ஆலியா பட் அதிதி ஷங்கர் என்று சொல்லி அவரை நெகிழ வைத்தார் நடிகர் சிங்கம்புலி. மேலும், விருமன் படம் திரைக்கு வருவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் கமிட்டாகி விட்டார் அதிதி . அதோடு தற்போது ராம்சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்கி வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் இருந்தும் அதிதி ஷங்கருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூர்யா என்றும், படிக்கிற காலத்தில் இருந்தே தான் அவருடைய தீவிரமான ரசிகை என்றும் கூறியிருக்கிறார் அதிதி ஷங்கர். அதோடு இப்போது அவரது தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள நான் அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாகவும் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார் அதிதி ஷங்கர்.