தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜுன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் சிலர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.
திருமண நிகழ்வின் வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. சுமார் 25 கோடி ரூபாய் உரிமைக்கு விற்கப்பட்டது என்று தகவல் வெளியான நிலையில் நெட்பிளிக்ஸ், விக்னேஷ் சிவன் இடையில் இந்தத் திருமண வீடியோ பற்றி பிரச்சினை எழுந்தது. நெட்பிளிக்ஸ் அனுமதி இல்லாமல் சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டதால் நெட்பிளிக்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து 25 கோடியைத் திரும்பக் கேட்டது என தகவல் வெளியானது. ஆனால், அதன் பின்னர் இருவருக்குள்ளும் சமசரம் ஆகியதாகவும் சொன்னார்கள்.
இந்நிலையில் திருமணம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு நயன்தாராவின் திருமண நிகழ்வை, “நயன்தாரா - பியான்ட் த பேரிடேல்' என்ற பெயரில் ஒரு டாகுமெண்டரியாக நெட்பிளிக்ஸ் வெளியிட உள்ளது. இது பற்றிய சிறு வீடியோ முன்னோட்டம் ஒன்றையும் நெட்பிளிக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளார்கள். அதில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரது பேட்டியும் இடம் பெற்றுள்ளது. இதை கௌதம் மேனன் இயக்கியுள்ளதாகத் தகவல்.