Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அதிர்ச்சி அளித்த சீனிவாசன் தோற்றம் : கண்கலங்கிய மோகன்லால் - மம்முட்டி

09 ஆக, 2022 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Actor-Srinivasan-look-:-Mohanlal,-Mammootty-tears

மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகர் சீனிவாசன். மேலும் கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் என இன்னும் சில முகங்களும் இவருக்கு உண்டு. இவரது மகன்கள் வினீத் சீனிவாசன் மற்றும் தயன் சீனிவாசன் இருவரும் மலையாள திரையுலகில் இயக்குனர்களாக, நடிகர்களாக இருக்கின்றனர்.

சமீப காலமாக நடிகர் சீனிவாசன், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். காரணம் கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் கூட திடீரென அவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் குணமாகி வீடு திரும்பினார். இருந்தாலும் அவரது உடல் மெலிந்து முகத்தோற்றம் ரொம்பவே மாறி விட்டது ரசிகர்களை வருத்தமடைய வைத்தது.

இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்தார் சீனிவாசன். அவரை கண்டதும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்த அவருக்கு அவருக்கு நெருங்கிய நண்பர்களான மோகன்லால், மம்முட்டி இருவரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அவரை வரவேற்றனர். கண் கலங்கிய மோகன்லால் அவரை கட்டியணைதது கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்புமலையாள லெஸ்பியன் படத்திற்கு ... ஜின்னா - தெலுங்கு படத்தில் சன்னி லியோன் : போஸ்டர் வெளியானது ஜின்னா - தெலுங்கு படத்தில் சன்னி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

12 ஆக, 2022 - 08:17 Report Abuse
Narayanan KK Oh..shocked to see the present picture of Srinivasan. Frail and completely lost his health. A great action who acts with great sense of humour and fits to any character well. Most of his films are super hits. Mohan lal and Srinivasan pair were once who ruled the malayalam film industry.
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
10 ஆக, 2022 - 07:30 Report Abuse
Vaduvooraan அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது மலையாள சினிமாவின் மிகப்பெரிய சிறந்த பன்முக ஆளுமைகளில் ஒருவர். ஸ்ரீனிவாசன் நல்ல கதாசிரியர், நடிகர். ரஜினியின் குசேலன் படத்தின் மூலக் கதை இவருடையதுதான். (அதை கங்கணம் கட்டிக் கொண்டு ரஜனிக்காக நம்ம ஆட்கள் சிதைத்து நசுக்கியது வேறு விஷயம்)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ponniyin Selvan
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in