ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
ஸ்ரீவத்ஸா லவ்லி என்ற தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் வாரணாசி பெண்ணான ஷான்வி. ஆனால் அதிக படங்கள் நடித்தது கன்னடத்தில். தி வில்லன், அவனே ஸ்ரீமன் நாராயணா, தரக் அவற்றில் முக்கிய படங்கள். தற்போது த்ரிசூலம், பாங்க் படங்களில் நடித்து வருகிறார். நிவின்பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியான மஹாவீர்யர் படத்தின் மூலம் மலையாளத்துக்கு சென்றார். அடுத்ததாக மராட்டிய மொழி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல மராட்டிய இயக்குனர் சமித் கக்கட் இயக்குகிறார், ஷரத் கேல்கர் ஹீரோ.
ராந்தி என்ற இந்த படத்தில் நடிப்பது குறித்து ஷான்வி கூறியிருப்பதாவது: இப்போது நான் கன்னட சினிமாவில் தீவிரமாக பணியாற்றி வருகிறேன். இந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்க வேண்டும் என்கிற எனது கனவின் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறேன். குறிப்பாக அதுல் குல்கர்னியுடன் நடிக்க இருப்பதை நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் ஒரு பெண்ணாக நடிக்கிறேன். ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட நான் படத்தில் நடிப்பதற்காக கன்னடம், மலையாளம், தெலுங்கு, சீன மொழிகளை கற்றுக் கொண்டேன். இப்போது புதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள இருக்கிறேன். இது சவாலாக இருக்கிறது. என்கிறார் ஷான்வி.