புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பாலிவுட் நடிகர் ஆமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா என்கிற படம் வரும் வெள்ளியன்று பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கரீனா கபூர் நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் நாகசைதன்யா நடித்துள்ளார். ரீமேக் படம் என்றாலும் இந்த படத்தின் ஹிந்திக்கான திரைக்கதையை நடிகர் அதுல் குல்கர்னி எழுதியுள்ளார். இந்த படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால் சென்னை, ஐதராபாத், மும்பை என இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மாறிமாறி கலந்து கொண்டு வருகிறார் ஆமீர்கான். அதுமட்டுமல்ல காபி வித் கரண், கோன் பனேகா குரோர்பதி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு இந்த படத்தை புரமோட் செய்து வருகிறார்.
அந்த வகையில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆமீர் கானிடம் அவர் ஆர்ஆர்ஆர் படம் பார்த்துவிட்டாரா என கேட்கப்பட்டடதற்கு, இன்னும் பார்க்கவில்லை என பதில் அளித்து அதிர வைத்தார். கடந்த ஏப்ரல் மாதமே வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் பாலிவுட் பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டது. தியேட்டர்களில் பார்க்காதவர்கள் கூட ஓடிடி தளத்தில் அந்த படம் வெளியானதும் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இத்தனைக்கும் அந்த பட வெளியீட்டுக்கு முன்னதாக மும்பையில் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் ஆமீர்கானும் கலந்து கொண்டு சிறப்பித்தார். விரைவில் ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் லால் சிங் சத்தா புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலியும் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தான் பார்க்கவில்லை என கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.