'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட்டில் தயாராகி வரும் பிரமாண்ட படம் பிரம்மாஸ்திரா : சிவபெருமானின் சக்திகளில் ஒன்றான அக்னி சக்தியை பெற்ற இக்கால இளைஞன் ஒருவனின் கதை. இதன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மவுனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் பலர் நடித்து உள்ளனர். அயன் முகர்ஜி இயக்கி உள்ளார். ப்ரீதம் இசை அமைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தில் இடம் பெறும் தேவா தேவா... என்ற பாடல் வெளியாகி டிரெண்ட் ஆகியுள்ளது. படத்தின் நாயகன் ரன்பீர் கபூர் சிவனின் சக்தியை பெறும்போது இந்த பாடல் அதன் பின்னணியாக ஒலிக்க இருக்கிறது. இது ஒரு வகையான பக்தி பாடலும் ஆகும்.
பாடல் பற்றி இசை அமைப்பாளர் ப்ரீதம் கூறியிருப்பதாவது: இந்த பாடலுக்கு நான் இசையமைக்கும்பொழுது ஒரு ஆன்மிக உணர்வு என்னுள் வந்தது. 'தேவா தேவா' மூலம், பாரம்பரிய மற்றும் பக்தி கூறுகளை முக்கியமாக வைத்து, இசையை நவீனப்படுத்தியுள்ளோம். இந்த ஆன்மிகப் பாடல் ஒரு உலக அனுபவத்தைத் தருகிறது. இது அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன். என்கிறார்.
கொலவெறி, ரவுடி பேபி, ஊ சொல்றியா மாமா மாதிரியான பாடல்களை விட இதுபோன்ற ஆன்மிக பக்தி பாடல்கள் டிரெண்ட் ஆவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.