ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன், ஷான்வி மேகன்னா நடித்து வெளியான 'குடும்பஸ்தன்' படம் 50 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட்டானது. இதில் நவீன் - வெண்ணிலா கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் - ஷான்வி ஜோடியின் இயல்பான நடிப்பு பலராலும் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில், ஷான்வே மேகன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மணிகண்டனுடனான புகைப்படங்களைப் பகிர்ந்து, ''எண்ணிக்கையில்லா உரையாடலகள், கணக்கிலடங்கா இரவு நேர உரையாடல்கள், 24 மணிநேரமும் காமெடி, சிரிப்பு, தெலுங்கு தமிழ் இங்கிலிஷ் கலந்து நிகழும் கற்றல்கள் என உங்களைப் போன்ற சிறந்த நடிகருடன் பணிபுரிவது மிகவும் அழகாக இருக்கிறது. உங்களிடம் ஒரு சிறந்த சக நடிகரை மட்டுமல்ல, ஒரு அற்புதமான நண்பரையும் கண்டுபிடித்திருக்கிறேன். அதனால் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். நிறைய அன்பும் மரியாதையும்!!'' எனப் பதிவிட்டிருந்தார்.
இதனையே எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மணிகண்டன், ''அருமையான சக நடிகராகவும் நண்பராகவும் இருப்பதற்கு நன்றி ஷான்வி மேகன்னா. உங்கள் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை உங்களை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லும்'' என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.




