''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்து சங்கராந்திக்கு வெளிவந்த 'கேம் சேஞ்சர்' படம் 400 கோடி ரூபாய் செலவில் உருவானதாக சொல்லப்பட்டது. ஆனால், படத்தின் வசூல் 150 கோடி மட்டுமே என்றார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் ராம் சரணுக்கு எதிர்பாராத தோல்வியைத் தந்து அதிர்ச்சியடைய வைத்தது.
இருந்தாலும் அதில் விட்டதை 'பெத்தி' படத்தில் ராம் சரண் பிடித்துவிடுவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கு வந்துவிட்டது. அதற்கு சாட்சியாக நேற்று வெளியான 'க்ளிம்ப்ஸ்' எனும் முன்னோட்டவீடியோ நிரூபித்துள்ளது.
வெளியான 24 மணி நேரத்தில் யு டியுபில் மட்டுமே தெலுங்கு க்ளிம்ப்ஸ் 36.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் யஷ் நடித்து வரும் 'டாக்சிக்' படத்தின் 24 மணி நேர க்ளிம்ப்ஸ் சாதனையை 'பெத்தி' முறியடித்துள்ளது. 'டாக்சிக்' படம் 31.5 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் பெற்றிருந்தது.
'வேர் இஸ் புஷ்பா' ஹிந்தி க்ளிம்ப்ஸ் 27.6 மில்லியன், 'தேவரா' 26.1 மில்லியன், 'குண்டூர் காரம்' 20.9 மில்லியன், 'வேர் இஸ் புஷ்பா' தெலுங்கு க்ளிம்ப்ஸ் 20.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.
ஏஆர் ரஹ்மானின் அசத்தலான பின்னணி இசை, ரத்தினவேலுவின் அற்புதமான ஒளிப்பதிவு, புச்சி பாபு சனாவில் அதிரடியான இயக்கம், ராம் சரணின் வித்தியாசமான தோற்றம் ஆகியவைதான் 'பெத்தி' பட க்ளிம்ப்ஸ் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெறக் காரணம் என விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.
வழக்கமான பிரம்மாண்டம் தேவையில்லை, புதிதாக ஏதாவது ஒன்று வேண்டும், அதை வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என ரசிகர்கள் சில இயக்குனர்களுக்கு இதன் மூலம் வெளிப்படுத்துவதாகவே நாம் அர்த்தம் கொள்ள வேண்டும்.