‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
புகழ்பெற்ற இந்துக்களின் புனித ஸ்தலமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் முன்பு கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட ஈ.வே.ராமசாமியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. பக்தியுடன் சாமி கும்பிட்டு வெளியே வரும்போது கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்கிற வாசகத்தை படிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்கிற குரல் நெடுநாளாக ஒலித்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள ஈ.வே.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் என்றார். அவரது இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டிருப்பதாவது: உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ பெரியார் சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன். என்று எழுதியிருக்கிறார். கஸ்தூரியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.