விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
ஹனு ராகவபுடி இயக்கத்தில், துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான தெலுங்குப் படம் 'சீதா ராமம்'. விமர்சகர்கள், ரசிகர்கள் பாராட்டைப் பெற்றுள்ள இந்தப் படத்தில் முதலில் கதாநாயகி சீதா மகாலட்சுமி வேடத்தில் நடிப்பதற்காக பூஜா ஹெக்டேவைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். ஆனால், அப்போது பூஜாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவருக்காக படிப்பைத் தள்ளி வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்பதால் வேறு வழியில்லாமல் வேறு ஹீரோயினைத் தேட ஆரம்பித்துள்ளார்கள். அப்போது கண்டுபிடிக்கப்பட்டவர்தான் இப்போது ஹீரோயினாக நடித்துள்ள மிருணாள் தாக்கூர் ஹிந்தி டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர். பின்னர் மராத்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
'சீதா ராமம்' படம் மிருணாளுக்கு நல்ல அறிமுகமாக அமைந்துள்ளது. கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால் படத்தில் பூஜா நடித்திருப்பார். இளவரசியாக இன்று கொண்டாடப்பட்டிருப்பார்.