2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

‛அண்ணாத்த' படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் 169வது படம் ‛ஜெயிலர்'. ‛பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அங்கு சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக் நடப்பதால் படத்தை திட்டமிட்டு முடிக்க முடியுமா என தெரியவில்லை. இதனால் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த எண்ணி உள்ளனர். இதற்கான ஜெயிலர் படக்குழு டில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென டில்லி சென்றுள்ளார். ‛ஜெயிலர்' படம் தொடர்பான பணிகளை ரஜினியே நேரில் சென்று பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.