தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் சிவின்! | பிளாஷ்பேக்: பழம்பெரும் பாலிவுட் நடிகர் வி சாந்தாராம் தயாரித்த பைந்தமிழ் திரைக்காவியம் “சீதா கல்யாணம்” | எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி ; அதிதிக்கு சித்தார்த் புகழாரம் | நயன்தாராவுக்கு ரூ.25 கோடி; நாக சைதன்யாவுக்கு ரூ.50 கோடி- நெட்பிளிக்ஸ் திருமண பேரம் | 8ம் ஆண்டு திருமண கொண்டாட்டத்தில் திலீப் - காவ்யா மாதவன் | இளைய மகன் திருமணத்தை அறிவித்த நாகார்ஜுனா | முதல்முறையாக ரீ ரிலீஸ் ஆகும் குணா! | தேவி ஸ்ரீ பிரசாத்தை தொடர்ந்து படங்களில் இருந்து நீக்கும் தயாரிப்பு நிறுவனம்! | சிவகார்த்திகேயன், ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? | பிளாஷ்பேக்: “கன்னியின் காதலி” தந்த 'கவியரசர்' கண்ணதாசன் |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். அவரது தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் மகளான தீ, பாடகர் அறிவு பாடிய 'என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் கடந்த வருடம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. யு டியூபில் 429 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்தப் பாடல் சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் தீ--யால் மேடையில் பாடப்பட்டது. அந்நிகழ்வில் அறிவு பாடவில்லை. இருப்பினும் அவரைப் பற்றி பாடல் பாடுவதற்கு முன்பு எதுவும் சொல்லவில்லை. இது கடந்த சில நாட்களாகவே சர்ச்சையில் இருந்து வந்தது.
அறிவு அதிருப்திஇதுதொடர்பாக அறிவு தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார். அதில், ‛‛இசை கோர்த்து, எழுதி, பாடி, நடித்ததுதான் 'என்ஜாய் எஞ்சாமி. யாரும் இதற்காக டியூனோ, மெலடியோ, ஒரு வார்த்தையே தரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக தூக்கமில்லாமல், பல அழுத்தமான இரவுகளுக்கிடையில் இந்தப் பாடலை உருவாக்கினேன். இது கூட்டு முயற்சி, ஒன்றிணைந்து உருவாக்கியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் தூக்கிச் செல்லலாம். ஆனால், நீங்கள் முழித்திருக்கும் போது, நடக்காது. எப்போதும் உண்மையே வெல்லும்” என கூறினார்.
இதற்கு சந்தோஷ் நாராயணன், ‛‛தனித்துவமான கலையை உருவாக்க நான், தீ, அறிவு ஆகியோர் ஒன்றாக அன்புடன் இணைந்து என்ஜாய் எஞ்சாமி பாடலுக்காக பணியாற்றினோம். தீ, அறிவு இந்தப் பாடலை பாட முடிவு செய்தார்கள். உருவாக்கத்திலும் இணைந்து பணியாற்றினார்கள். தீ அவருடைய வரிகளுக்கு இசைக்கோர்ப்பு செய்தார். அறிவு பாடலை எழுத ஒத்துக் கொண்டார். மற்ற டியூன்களை நான் கம்போஸ் செய்தேன். அறிவு பாடிய பகுதியையும் நான் கம்போஸ் செய்தேன். இப்பாடலின் மூலம் வரும் வருமானம் எனக்கும், தீ, அறிவு ஆகியோருக்கு சமமாக வர வேண்டும் என வெளிப்படையாக இருந்தேன். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவின் போது அறிவு வெளிநாட்டில் இருந்தார். அதனால், அப்போது அறிவு பாடியவை பயன்படுத்தப்பட்டன'' என்றார்.
தீ வெளியிட்ட விளக்கம்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாடகி தீ-யும் தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், ‛‛என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம், உரிமைகள் எனக்கு, அறிவு, சந்தோஷ் நாராயணன் ஆகிய மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. இந்த பாடலின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அறிவு, சந்தோஷிற்கு உரிய அங்கீகாரம் வழங்கி உள்ளேன். அவர்களை பற்றி கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பெருமையாக பேசி உள்ளேன். அவர்களை குறைத்து மதிப்பிட்டது கிடையாது. 'என்ஜாய் எஞ்சாமி' எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன்.
பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம். மேகஸின் ஒன்றின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் கூட்டணியில் அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படமே அது. மற்றபடி, அது என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கானது அல்ல. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் அறிவையும் பங்கேற்க வைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். ஆனால் அவர் அமெரிக்காவில் இருந்ததால் பங்கேற்கவில்லை. அவரை குரலை பயன்படுத்தினோம். என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கத்திற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு மற்றும் ஒட்டுமொத்த மஜா குழுவினருக்கும் என் ஆழ் மனதில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன். இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.