'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். நாளை(ஆக.,3) இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு மதுரையில் நடைபெற உள்ளது.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிளான 'கஞ்சாப்பூவு கண்ணால' பாடல் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டாகிவிட்டது. அடுத்து இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 'மதுரை வீரன்' என்ற பாடலின் சிறு வீடியோவை இன்று வெளியிட்டார்கள்.
அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார் அதிதி. பாடலை முதல் முறை கேட்கும் போதே இனிமையாக உள்ளது. அந்தப் பாடலுக்கு அதிரடியான நடனத்தையும் ஆடியுள்ளார். அதிதியைப் பாராட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டாக்டருக்குப் படித்து முடித்துள்ள அதிதி சினிமா மீதுள்ள ஆசையால் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.