முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : ஜன.,20 முதல் ஓடிடியில் வெளியீடு | 'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் | அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன் | சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது! |

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் சிங்கிளான 'பொன்னி நதி' பாடல் இரண்டு தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது.
வழக்கம் போல இந்தப் பாடலுக்கும் பல்வேறு விதமான விமர்சனங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். ரஹ்மான் ரசிகர்கள் பாடலை ஆகா ஓகோவெனப் பாராட்டுகிறார்கள். அதே சமயம் மற்றவர்கள் சரித்திர காலப் பாடல் போல இல்லாமல் இருக்கிறது என்றும் குறை சொன்னார்கள்.
இப்படி சில பல விமர்சனங்கள் எழுந்த போதும் பாடல் வெளியான ஐந்து மொழிகளிலும் சேர்த்து ஒரு கோடி பார்வைகளை இப்பாடல் யு டியூபில் கடந்துள்ளது. தமிழில் 80 லட்சம், தெலுங்கு, ஹிந்தியில் தலா 17 லட்சம், மலையாளத்தில் 5 லட்சம், கன்னடத்தில் 4 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் விரைவில் படத்தின் இசை வெளியீடு, டிரைலர் வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.