மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' | தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன? | தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? |

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்க ஆரம்பமான படம் ‛இந்தியன் 2'. படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, தயாரிப்பாளர், இயக்குனர் ஷங்கர் இடையே ஏற்பட்ட மோதல் போன்ற பிரச்னைகளால் இதன் படப்பிடிப்பு நின்று போனது. இதனால் தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் இயக்க துவங்கினார் ஷங்கர். இதனால் தயாரிப்பு நிறுவனம் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் இருவரும் சமாதானம் ஆகினர். இதையடுத்து விரைவில் இந்தியன் 2 படம் துவங்க உள்ளது.
தற்போது ராம் சரண் படத்தை இயக்கி வரும் ஷங்கர் அதை முடித்ததும் இந்தியன் 2வை துவங்க உள்ளார். இந்தியன் 2வில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்தார். அவருக்கு குழந்தை பிறந்ததால் இந்த படத்தை விட்டு விலகினார். இனி அவர் இந்த படத்தில் தொடர முடியாது என்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு புதிதாக இன்னொரு நாயகியை வைத்து படமாக்க திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் காஜலுக்கு பதில் அவரது வேடத்தில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.