மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

பாலிவுட்டில் கதாநாயகனாக, வில்லனாக, தற்போது குணச்சித்திர நடிகராக என எப்போதும் பிசியான நடிகராக நடித்து வருபவர் ஜாக்கி ஷெராப். தமிழில் 'பிகில், ஜெயிலர்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் சூப்பர் மேன் கதையம்சம் கொண்ட 'தி கிரேட் கிராண்ட் சூப்பர் ஹீரோ ; ஏலியன்ஸ் கா ஆக்மேன்' என்கிற படத்தில் சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜாக்கி ஷெராப்.
இந்த படத்தில் இருந்து ஜாக்கி ஷெராப்பின் பர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் பள்ளி மாணவன் ஒருவனின் தாத்தாவாக இருக்கும் ஜாக்கி ஷெராப் அவனின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக சூப்பர் மேன் ஆக மாறுகிறார் என்பது போன்று இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சூப்பர் மேன் போன்ற உருவத்திற்காக ஜாக்கி ஷெராப் உருவத்தை டி ஏஜிங் முறையில் மாற்றியிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.