ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
நடிகர்கள், நடிகைகள் சரியாக படப்பிடிப்புகளுக்கு வராமல் 'டிமிக்கி' கொடுத்தால் அது பற்றி புகார் அளிப்பதற்கு ஒரு சங்கம் இருக்கிறது. ஆனால், அந்த சங்கத்தின் செயலாளரே காணாமல் போனால் யாரிடம் போய் புகார் அளிப்பது. இப்படி ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கிறது ஒரு படக்குழு.
தற்போது செயலாளர் நாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் இதற்கு முன்பும் செயலாளரை வைத்து ஒரு படத்தைத் தயாரித்தார். அப்படத்தில் செயலாளரின் நெருங்கிய நண்பன்தான் வில்லனாக நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போதும் அடிக்கடி செயலாளர் எங்காவது எஸ்கேப் ஆகிவிடுவாராம். அவருடைய தொலைபேசியும் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுமாம். எங்கு போவார், என்ன செய்வார் என்று யாருக்குமே தெரியாதாம். எப்படியோ தட்டுத் தடுமாறி அந்தப் படத்தை முடித்து வெளியிட்டார்கள். ஆனால், படம் தோல்வியடைந்தது.
அந்த தோல்விக்கான நஷ்டத்தை சரி செய்து கொடுக்கத்தான் மீண்டும் கால்ஷீட் கொடுத்தாராம். அதனால், அவரை வைத்து சில பல தடங்களுக்குப் பிறகுதான் இந்த படத்தை ஆரம்பித்தார்களாம். இப்போதும் இப்படி எஸ்கேப் ஆகிவிட்டாராம். செயலாளர் நடிக்க வராத காரணத்தால் வெளியூரிலிருந்து நடிக்க வந்த கதாநாயகி பயங்கர கடுப்பில் இருக்கிறாராம். படக்குழுவே செயலாளர் எப்போது வருவார் என விழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டடிருக்கிறதாம். இந்த செய்தியாவது விழ வேண்டிய அந்த 'வி' நடிகர் காதில் விழுந்து படப்பிடிப்பு மீண்டும் நடக்கட்டும்.