'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரை நடிகர் அக்ஷய் கமல் முதன் முதலில் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் தான் அறிமுகமானார். ஹரீஸ் என்ற சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமானதால் ரசிகர்களால் அவரை ஹரீஸ் என்றே செல்லமாக அழைத்து வந்தனர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'ரெட்டை ரோஜா' தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
வொர்க்-அவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அக்ஷய் கமல் தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட, ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது புரொபைலை ரசிகர்கள் அலசி ஆராய, சில மாதங்களுக்கு முன் கிளாடியேட்டர் கெட்டப்பில் அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அவரது பிட்னஸை பார்த்து பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட் ஹீரோக்களுடனும் அக்ஷய் கமலை கம்பேர் செய்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.