அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் ரம்யா கவுடா. தற்போது 'அபியும் நானும்' என்கிற தொடரில் வாத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழக இளைஞர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்து வரும் ரம்யா, ரசிகர்களை கவர சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக போட்டோஷூட், ரீல்ஸ் என பதிவிட்டு வருகிறார். தற்போது விடுமுறையை கொண்டாட சுற்றுலா சென்றுள்ள ரம்யா, பனிமூடியிருக்கும் சாலையில் வேகமாக பயணிக்கும் காரிலிருந்து, ஜன்னல் வழியே உடம்பை வெளியே நீட்டி ரசித்து மகிழ்கிறார். காற்றில் அவரது நீளமான கூந்தல் அலை அலையாய் பாய்வதை பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. ரம்யாவின் இந்த சுட்டித்தனமான சேட்டையை பலரும் ரசித்து வருகிறார்கள். அதேசமயம் 'காரில் புட் போர்டு அடிக்கலாமா? ஜாக்கிரதையாக இருங்கள்' என அட்வைஸூம் செய்து வருகின்றனர்.