அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்தில் விஜய்- சஞ்சய்தத் சம்பந்தப்பட்ட பல போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டரும் லியோ படத்தில் தான் நடித்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் சிக்ஸ் பேக் கெட்டப்பில் காணப்படுகிறார். அதோடு, ‛கீப் காம் அண்ட் வெயிட் பார் லோகேஷ் மேஜிக்' என்றும் ஒரு டேக் லைனை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, லியோ படத்தில் சாண்டி மாஸ்டரும் ஒரு மிரட்டலான வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது.