ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
சின்னத்திரை இயக்குநர் திருசெல்வம் நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கிறார். பெண் ஆளுமையை பறைசாற்றும் வகையில் முன்னதாக இவர் இயக்கியிருந்த 'கோலங்கள்' சீரியல் சூப்பர் ஹிட்டானது. தற்போது அதே கான்செப்ட்டில் 'எதிர்நீச்சல்' என்ற தொடரை இயக்கி வருகிறார். இல்லத்தரசிகளை தாண்டி இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் இந்த தொடர் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கில் 'உப்பென்னா' என்ற பெயரிலும் மலையாளத்தில் 'கனல்பூவு' என்ற ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், மிக விரைவில் கன்னடத்திலும், வங்காள மொழியிலும் எதிர்நீச்சல் சீரியல் ரீமேக் செய்யப்பட உள்ளது. கயல் சீரியலுக்கு அடுத்தப்படியாக 'எதிர்நீச்சல்' தான் அதிக மொழிகளில் ரீமேக் ஆகும் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.