கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு |
இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சதுரங்கப் போட்டியான 44வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடக்கிறது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் ஆக., 9 வரை போட்டிகள் நடக்க உள்ளன. ஆக., 10ம் தேதி நிறைவு விழா நடக்கிறது. இன்று(ஜூலை 28) போட்டிக்கான துவக்க விழா நடந்தது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரைப்பிரபலங்கள் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் ரஜினியின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யாவும் பங்கேற்றார். இதேப்போன்று நடிகர் காத்தியும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். முன்னதாக செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு அப்பா ரஜினியுடன் காரில் சென்று போட்டோவை ஐஸ்வர்யா பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
அசத்திய லிடியன்
இளம் வயதில் இசையில் சாதனை படைத்து வரும் லிடியன் நாதஸ்வரம் நிகழ்ச்சிக்கான துவக்க விழாவில் தனது இசை திறமையை வெளிப்படுத்தினார். கண்களை கட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் பியானோவில் இசையமைத்தார். பின்னர் ஒரே சமயத்தில் இரண்டு பியானோவில் ஹாலிவுட் படங்களின் தீம் மியூசிக்கை வாசித்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
தமிழர்களின் பெருமையை கூறிய கமல்
துவக்க விழா நிகழ்ச்சியில் தமிழர்களின் பெருமையை கமல் எடுத்து கூறினார். கமல் பின்னணி குரல் கொடுக்க அவர் கூறும் தமிழர்களின் பெருமைகளுக்கு ஏற்ப கலைஞர்கள் நடித்து காண்பித்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
திரையுலகினர் வாழ்த்து
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு திரையுலகினரும் வாழ்த்து கூறியுள்ளனர். நடிகர் ரஜினி, 'சதுரங்கம் நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு. அனைத்து செஸ் வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்' எனக் கூறினார்.
அதேபோல் விஷாலும், இந்திய செஸ் அணியினருக்கும், மற்ற நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளதோடு, தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் சிறப்பான ஏற்பாட்டுக்காக பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், 'போர்களமே புகலிடம் மாவீரர்களுக்குகொண்டாடுவோம் நம் நாட்டின் சதுரங்க வீரர்களை' என சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படக்குழு வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளது.
இது இவரது ஸ்டைல்
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடிகர்கள் ரஜினி, விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்து கூறி படம் மற்றும் வீடியோ வெளியிட்டுள்ளனர். தமிழக அரசோ, நேப்பியர் பாலத்தை சதுரங்க கட்டம் போன்ற நிறத்தில் மாற்றியுள்ளது. அதேபாணியில், நடிகை கோமல் சர்மா சதுரங்க கட்டத்தை போன்ற உடையணிந்து கிறங்கடிக்கும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.