பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வாத்தி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் நேரடி படமாக நடித்து வரும் படம் ‛சார்'. தமிழில் இந்த படம் ‛வாத்தி' என்ற பெயரில் வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்க, நாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இன்று(ஜூலை 28) தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு டீசரை வெளியிட்டுள்ளனர்.
கல்வி அமைப்பை மையப்படுத்தி இந்த கதை உருவாகி இருப்பதை டீசரில் காண முடிகிறது. பாலமுருகன் வாத்தியராக தனுஷ் நடித்துள்ளார். ‛‛படிப்பு என்பது பிரசாதம் மாதிரி எல்லாத்துக்கும் கொடுங்க, பைவ் ஸ்டார் ஓட்டலில் கொடுக்கும் சாப்பாடு போன்று விக்காதீங்க'' போன்ற வசனங்களும், ஆக் ஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.