தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி |

தங்கர் பச்சான் இயக்கும் படத்திற்கு “கருமேகங்கள் கலைகின்றன" என பெயரிட்டுள்ளனர். இதில் முதன்மை வேடத்தில் யோகி பாபு, மம்தா மோகன்தாஸ் நடிக்கின்றனர். இவர்களுடன் பாரதிராஜா, கவுதம் மேனனன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, ராமேஸ்வரம் போன்ற ஊர்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில் திரைப்படத்தின் அனைத்து நடிகர்களும் பங்கேற்கிறார்கள்.
முந்தைய திரைப்படங்கள் போலவே இத்திரைப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல் கொண்ட படமாக இது இருக்கும் என தங்கர்பச்சான் தெரிவித்தார்.
கண்மணி எனும் கதைப் பாத்திரத்திற்காக இந்தியாவிலுள்ள பல நடிகைகளிடம் நடிப்புத் தேர்வு நடத்திய பின் மம்தா மோகன்தாஸ் தேர்வாகி இருக்கிறார். இத்திரைப்படத்தின் மையமான பாத்திரத்தில் தான் நடிப்பதைப் பெருமையாக கருதுவதாக மம்தா மோகன்தாஸ் கூறுகிறார். மேலும் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் போன்றோர் நடிக்கிறார்கள்.