சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

நடிகரும், இயக்குனருமான ஜி.எம்.குமார் உடல்நலக்குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். அறுவடை நாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகிய படங்களை இயக்கினார். கன்னி ராசி(1985), காக்கிச்சட்டை போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
பிறகு நடிகராக களமிறங்கிய இவர் வெயில் படம் மூலம் கவனிக்க வைத்தார். அதன்பிறகு மச்சக்காரன், மலைக்கோட்டை, குருவி, அவன் இவன், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். சென்னையில் வசித்து வந்த ஜி.எம்.குமார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். சுவாசக் கருவி உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.