'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
2022ம் ஆண்டின் ஜுலை மாதக் கடைசி வாரத்தில் இருக்கிறோம். இந்த வாரத்தில் நாளை ஜுலை 28ம் தேதி 'த லெஜன்ட், ஜோதி' ஆகிய படங்களும், ஜுலை 29ம் தேதி 'குலு குலு, பேட்டரி' ஆகிய படங்களும் வெளியாகின்றன. இந்த நேரடிப் படங்கள் தவிர கன்னடத்திலிருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள 'விக்ராந்த் ரோணா' படமும் தியேட்டர்களில் வெளியாகிறது. ஓடிடி தளத்தில் 'வட்டம்' படம் வெளியாகிறது.
இந்த வார வெளியீடுகளில் பெரிய எதிர்பார்ப்பு என எந்தப் படமும் இல்லை. 'த லெஜன்ட்' படம் பான்--இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியாகிறது. டிவி விளம்பரங்கள் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட சரவணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஜுலை 29ம் தேதி வெளியாக உள்ள 'குலு குலு' படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். 'மேயாத மான், ஆடை' படங்களை இயக்கிய ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வழக்கமான படமல்ல என்கிறது படக்குழு.
'ஜோதி, பேட்டரி' ஆகியவை சிறிய பட்ஜெட் படங்கள். இருப்பினும் இந்தப் படங்கள் நல்லதொரு கதையுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் இந்த வாரப் படங்களுக்கான எப்படி வரவேற்பு அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.