தக் லைப் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த கமல்ஹாசன் | புஷ்பா 2வில் பெண் வேடத்தில் நடிக்க பயந்த அல்லு அர்ஜுன் | ஜெயம் ரவியை தொடர்ந்து பெயரை மாற்றிய கவுதம் கார்த்திக் | கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் ஓடேலா 2 டீசர் | நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா வளைகாப்பு : வாழ்த்திய பிரபலங்கள் | மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை |
பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த மணிவண்ணன் 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பிறகு பல வெற்றி படங்களை இயக்கினார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மிகப்பெரிய வெற்றியே அவரது வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது. ஆனால் அவரது முதல் படம் ‛கோபுரங்கள் சாய்வதில்லை' அல்ல.
இந்தப் படத்திற்கு முன்பே அவர் இயக்கி முடித்த படம் 'ஜோதி'. இதில் மோகன், அம்பிகா, சத்யஜித், சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, வினு சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
ஒரு கிராமத்திற்கு நாடகத்தில் நடிக்க வரும் ஹீரோ அந்த கிராமத்தில் டீக்கடை நடத்தும் பெண்ணை காதலிப்பது தான் கதை. எந்த எதிர்ப்பும் இல்லாத இவர்கள் காதலுக்கு செயற்கையாக பல காரணங்களை காட்டி திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்ததால் படம் படுதோல்வி அடைந்தது. இளையராஜாவின் இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண பிரச்னைகள் காரணமாக படம் வெளியாகாமல் இருந்து இரண்டாவது படமாக தாமதமாக வெளியானது.
இந்தப் படம் மணிவண்ணனுக்கு முதல் படமாக அமைந்திருந்தால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். ஜோதி படம் தான் அவரது வெற்றிக்கு வழி விட்டு கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை முதல் படமாக கொடுத்தது.